உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் குழாய் அகற்றும் பணியில் 2 கிரேன்கள் கவிழ்ந்ததால் பரபரப்பு

குடிநீர் குழாய் அகற்றும் பணியில் 2 கிரேன்கள் கவிழ்ந்ததால் பரபரப்பு

கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்று பழைய பாலத்தில் உள்ள குடிநீர் குழாய்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட 2 கிரோன்கள் தலைக்குப்புற கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் ஆட்சி யில் கட்டப்பட்ட இரும்பு பாலம், ஒவ்வொரு பகுதியாக இடிந்து விழுந்து வருகிறது. அதன்காரணமாக பாலத்தின் மீது செல்லும் குடிநீர் மற்றும், கழிவுநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டன. அதற்காக தற்காலிகமாக இரும்பு சட்டங்களால் இணைப்பு கொடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தின் அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட உள்ளதால், பழைய இரும்பு பாலத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.அதைனையொட்டி, பழைய பாலத்தில் செல்லும் குழாய்களை இரும்பு சட்டத்தோடு அகற்றும் பணி நேற்று நடந்தது. இப்பணியில் ஈடுபட்ட இரு கிரேன்கள் பாரம் தாங்காமல் தலைக்குப்புற கவிழ்ந்தன. அதர்ஷ்டவசமாக கிரேன் ஆப்ரேட்டர்கள் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை