உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது

கடலுார்: கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் ராஜகோபால்,70; லாரி டிரைவரான இவர், நேற்று கடலுார் பீச்ரோட்டில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் பொருட்களை இறக்கிவிட்டு, லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.அப்போது, கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 34; நடராஜன் மகன் அரவிந்த்,23; அருள்ராஜ், 35; ஆகியோர் லாரியில் இருந்த ரூ.2,500 மதிப்புள்ள இரும்பு லிவர் மற்றும் கம்பியை திருடினர். அதனைக் கண்டு திடுக்கிட்ட ராஜகோபால், கூச்சலிட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூவரையும் பிடித்து புதுநகர் போலீசில் ஒப்படைத்தார்.போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை