உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 3 சவரன் தங்க கட்டி அபேஸ் சிதம்பரத்தில் துணிகரம்

3 சவரன் தங்க கட்டி அபேஸ் சிதம்பரத்தில் துணிகரம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் நகை செய்பவரை ஏமாற்றி, 3 சவரன் தங்க கட்டியை 'அபேஸ்' செய்த 'டிப்டாப்' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரத்தை சேர்ந்தவர் சேகர். இவர், இளமையாக்கினார் கோவில் அருகே நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு நகை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த டிப்டாப் ஆசாமி, வீட்டு வாசலில் வைக்க நவரத்தின கல் வேண்டும். உங்களிடம்தான் தரமான கல் இருப்பதாக கூறியதால் வந்ததாக தெரிவித்தார்.அதனை நம்பிய சேகர், தான் கையில் நகை செய்ய வைத்திருந்த மூன்று சவரன் தங்கக் கட்டியை கீழே வைத்துவிட்டு, கடை உள்ளே சென்று, நவரத்தின கற்களை எடுத்து வந்தபோது, டிப்டாப் ஆசாமியை காணவில்லை. மேலும், அவர் வைத்துவிட்டு சென்ற 3 சவரன் தங்க கட்டியும் காணவில்லை. டிப்டாப் ஆசாமி திருடிச் சென்றது தெரிய வந்தது. சேகரின் புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து டிப்டாப் ஆசாமியை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை