உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 7 மையங்களில் நீட் தேர்வு 4,974 மாணவர்கள் பங்கேற்பு

7 மையங்களில் நீட் தேர்வு 4,974 மாணவர்கள் பங்கேற்பு

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 7 மையங்களில் நடத்தப்பட்ட நீர் நுழைவுத் தேர்வில் 4,974 மாணவர்கள் தேர்வு எழுதினர். 191 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட அனைத்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு (தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு) தேசிய தேர்வு முகமையால் நேற்று நடத்தப்பட்டன. கடலுார் மாவட்டத்தில் கடலுார் ஜட்ஜ் பங்களா ரோடு சி.கே. பாரா மெடிக் கல்லுாரி, திருப்பாதிரிபுலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, கடலுார் மாலுமியார் பேட்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, விருத்தாசலம் பூந்தோட்டம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அடுத்த வில்வக்குளம் அக்ஷரா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி பனிக்கன்குப்பம் ஜெயின்ட் பால் பப்ளிக் பள்ளி ஆகிய ஏழு மையங்களில் தேர்வு நடந்தது. இதற்கு 1,849 ஆண்கள், 3,316 பெண்கள் என 5,165 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு மதியம் 2 மணிக்கு துவங்க இருந்த நிலையில் தேர்வு மையங்களுக்கு காலை 11 மணிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்தனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. 11.30 மணி முதல் மாணவர்களை ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் உடல் சோதனை போன்றவைகளை செய்து மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். 1.55 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு சரியாக 2 மணிக்கு துவங்கி 5.20 மணி வரை நடந்தது. நீர் தேர்வில் மாணவர்கள் 1,779, மாணவிகள் 3,195 என 4,974 என 96 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். 91 பேர் தேர்வு எழுதவில்லை. கடலுார் மாவட்ட நீட் நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீலதா அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீட் தேர்வை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ