உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

புவனகிரி: புவனகிரியில் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகை மற்றும் பொருட்கள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி கவரப்பாளையம் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், 62; புவனகிரி போலீஸ் நிலையம் அருகில் செந்தில் ஆப்செட் பிரஸ் நடத்தி வருகிறார். இவர், கடந்த 21 தேதி, இரவு குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா சென்றார். நேற்று அதிகாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ௫ சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து புவனகிரி போலீசில் தியாகராஜன் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தயடங்கள் சேகரித்தனர்.இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவ வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புவனகிரி அடுத்த மணவெளியில் வீட்டின் ஓட்டை பிரிந்து 20 சவரன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை