உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாய்க்காலில் பாய்ந்த கார்; சேத்தியாத்தோப்பில் பரபரப்பு

வாய்க்காலில் பாய்ந்த கார்; சேத்தியாத்தோப்பில் பரபரப்பு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே 20 அடி ஆழ வாய்க்காலில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.புதுக்கோட்டை மாவட்டம், ராஜமன்னார்குடியை சேர்ந்தவர் இளஞ்சேரலாதன், 53; சென்னையில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு இனோவா காரில் ராஜமன்னார்குடிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குமாரக்குடி வளைவு பாலத்தை கடந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரிக்கு வழிவிட ஒதுங்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள 20 அடி ஆழ வாய்க்காலில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. அதில் காரை ஓட்டி வந்த இளஞ்சேரலாதன் லேசான அடியுடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.அவரை, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ