உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபரை ஆபாசமாக திட்டியவர் மீது வழக்கு

வாலிபரை ஆபாசமாக திட்டியவர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் முல்லை நகர், ஏ.பி., காலனியை சேர்ந்தவர் மணிகண்டன், 34. இவர், ஆலடி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 33, என்பவரிடம் தனது வீட்டிற்கு, சி.சி.டி.வி., கேமரா பொருத்த ரூ.36 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.ஆனால், தினேஷ்குமார் கேமராவை பொருத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த 2ம் தேதி மணிகண்டன் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டதால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த தினேஷ்குமார், மணிகண்டனை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் தினேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ