உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூறை காற்றில் மின்கம்பம் முறிந்தது; மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

சூறை காற்றில் மின்கம்பம் முறிந்தது; மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வீசிய சூறைக்காற்றில் மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு பலியானது.விருத்தாசலம் பகுதியில் நேற்று அதிகாலை சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்தது. சாவடிக்குப்பம் பகுதியில் இருந்த மின் கம்பம் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்தது.அப்போது, அங்கு கட்டியிருந்த பாஸ்கர் மனைவி பெரியதாயி என்பவருக்கு சொந்தமான பசு மாடு மீது மின்கம்பி விழுந்தது. அதில் மின்சாரம் பாய்ந்து, மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும், அருகிலுள்ள மற்றொரு மின்கம்பமும் முறிந்தது. தகவலறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா மற்றும் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, அறுந்து கிடந்த மின் கம்பிகளை அகற்றி, புதிதாக கம்பங்களை மாற்றி இணைப்பு கொடுத்தனர்.கால்நடை மருத்துவரின் பரிசோதனை முடிந்து பசுமாடு புதைக்கப்பட்டது. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ