உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை

புதிய எம்.பி.,யிடம் மா.கம்யூ., கோரிக்கை

கடலுார்: கடலுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என, புதிய எம்.பி.,க்கு, மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.கடலுார் புதிய எம்.பி., விஷ்ணுபிரசாத்திடம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் அளித்த மனு:கடலுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். விழுப்புரம்-சென்னை ரயில்களை கடலுார் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கடலுார் துறைமுகம் சந்திப்பு வரை வரும் சேலம்-விருத்தாசலம் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.மயிலாடுதுறை-கோவை, மயிலாடுத்துறை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். மன்னார்குடி எக்ஸ்பிரஸ், மகால் எக்ஸ்பிரஸ், உழவன், காரைக்கால், சென்னை-ராமேஸ்வரம், கன்னியாக்குமாரி-வாரணாசி, காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். கடலுார்-புதுச்சேரி-சென்னை புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ