உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கத்தாழை அரசு பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியர்

கத்தாழை அரசு பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியர்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை அரசு பள்ளி தனது மகளை சேர்த்த ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டினர்.சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியாக பணிபுரிந்து வருபவர் கார்த்திக்ராஜா. நல்லாசிரியர் விருது பெற்ற கார்த்திக்ராஜா தங்களது பெற்றோர்கள் பிள்ளைகளை அரசுபள்ளியில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்.கத்தாழை, மும்முடிசோழகன் கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது 5 வயது மகன் சபரிஸ்வராவை கத்தாழை அரசு நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளார்.தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரியர் கார்த்திக்ராஜாவை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை