உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து பயிற்சி

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து பயிற்சி

விருத்தாசலம்: மங்களூர் அடுத்த ம.புதுார் ஊராட்சியில் மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வெளி வளாக பயிற்சி நடந்தது.விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம், தனுகா நிறுவனம் ஆகியன சார்பில் நடந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். அதில், வேளாண் அறிவியல் நிலையத்தில் முக்கிய குறிக்கோள், அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி, படைப்புழு தாக்குதலுக்கு மேலாண்மை குறித்து பயிற்சி தரப்பட்டது.மேலும், கோடை உழவு விதை நேர்த்தி, மண்வள மேம்பாடு குறித்து செயல்விளக்கப் பயிற்சி தரப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பதில் அளித்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை