உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

மதுபாட்டில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

திருக்கோவிலுார்: மன்னார்குடி, கோல்டன் வாஷ் கம்பெனியில் இருந்து நேற்று மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவண்ணாமலை டாஸ்மாக் குடோனுக்கு புறப்பட்டது. லாரியை, கும்பகோணம், ஜக்கம்பேட்டை ஜெயராமன், 63; ஓட்டிச் சென்றார்.காலை 11:30 மணிக்கு திருக்கோவிலுார் புறவழிச் சாலையில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, லாரி கட்டுப் பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார்.திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மது பாட்டில்களை வேறு லாரியில் ஏற்றி அனுப்பினர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ