உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் ஆதார் சிறப்பு முகாம்

விருத்தாசலத்தில் ஆதார் சிறப்பு முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் நடக்கும் ஆதார் சிறப்பு சேவை முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என, அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள் (விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார்) மற்றும் குறிப்பிட்ட துணை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு சேவை முகாம் கடந்த 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஜூலை 5 வரையில் நடக்கிறது. இதில், புதிதாக ஆதார் எடுக்க கட்டணம் இல்லை. இதற்கு குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளைக் எடுத்து வரவேண்டும். பெயர், பிறந்ததேதி, முகவரி மாற்றம் செய்ய ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், புகைப்படம் மற்றும் கைரேகை மாற்ற ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெயர் மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை