உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரத்தனா பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

ரத்தனா பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிியல் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரவி முன்னிலை வகித்தார். விழாவில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பொதுதேர்வில் முதல் மூன்று இடம், 100க்கு 100 மதிப்பெண்பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். பள்ளி அளவில் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண், பண்ருட்டி நகர அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் சைலேந்திர கிருஷ்ணாவுக்கு, சிறப்பு பரிசாக 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி ரொக்க பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ