உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பம் பகுதியில் அரசு பள்ளிகள் சாதனை

நெல்லிக்குப்பம் பகுதியில் அரசு பள்ளிகள் சாதனை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நெல்லிக்குப்பம் அரசினர் ஆண்கள் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரிகிருஷ்ணன் 439, அரிஷரன் 428, சவுந்தரராஜன் 392 பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவர்களை தலைமையாசிரியர் தரணிதரன் பாராட்டினார்.நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சர்மிளா 539 ,பிருந்தா 537, கீர்த்திகா 513 பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்தனர். மாணவிகளை தலைமையாசிரியர் பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் பாராட்டினர்.ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியில் 99 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பரத்,556,தனோபர்,539,நிவேதா,529 பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ராதாகிருஷ்ணன் இயக்குனர் உதயகுமார் பாராட்டினர். டேனிஷ்மிஷன் பள்ளியில் 91 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தரணி 521, சஞ்சய் 484, திவாகர் 481 பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவர்களை தலைமையாசிரியர் ஆனந்த பாஸ்கரன் பாராட்டினார்.மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ பள்ளியில் 96 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கவியரசி 518, முத்தரசி 510, அபிநயா 496 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தலைமையாசிரியை ரெஜினாஉஷா மாணவிகளை பாராட்டினார்.நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ