கடலுார், : கடலுார் மாவட்டத்தில், 117 அரசு பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 11,468 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 86.83 சதவீதம் மாணவர்களும், 94.18 சதவீதம் மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 90.97ஆகும். அதேபோல், மாவட்டத்ததில் 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையில், 7,101 பேர் தேர்வு எழுதி 6,708 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.47 ஆகும். இதில், மாணவர்கள் 91.22 சதவீதமும், மாணவியர் 97.27சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.99 மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 8,811 பேர் தேர்வு எழுதி, 8,735 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.14 ஆகும். இதில், மாணவர்கள் 99.04, மாணவியர் 99.26 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.மாவட்டத்தில் மொத்தம் 246 பள்ளிகள் சார்பில் 13,820 மாணவர்கள், 14,698 மாணவியர் என, 28,518 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 12,758 பேர், 14153 மாணவிகள் பேர் என, மொத்தம் 26,911 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.32 சதவீதமும், மாணவியர்கள் 96.29 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 3.97 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.