உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் 210 பேர், வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், சி.சி.டி.வி., அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று டி.எஸ்.பி.,க்கள் பிரபு, சவுமியா ஆகியோர் ஓட்டு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டனர்.அப்போது, ஓட்டு எண்ணிக்கையின்போது, செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும், நேற்று முதல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை