உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

புத்தேரி மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி மாதம் கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் உலக மக்கள் நலன் வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், 10:30 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

சேத்தியாத்தோப்பு

பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ௸தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை