கடலூர் மகாலட்சுமி கல்வி நிறுவனத்தில் கட்டண சலுகையுடன் மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.இதுகுறித்து ஸ்ரீமகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரவி கூறியதாவது:கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பத்தில் 2010 முதல் ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி இயங்குகிறது. கடலுார் மாவட்டத்திலேயே அரசு தேர்வில் மாநில அளவில் 700க்கு 691 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ஒரே கல்லுாரியாக உள்ளது.இங்கு, அக்ரிகல்சர் இன்ஜினியரிங், மெடிக்கல் லேபோராட்டரி டெக்னாலஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜனியரிங் டிப்ளமோ பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது.இங்கு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகம், பஸ் வசதி இலவசம். எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் கல்விக் கட்டணம் தேவையில்லை. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ்2 அல்லது ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேரலாம்.டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ., படிக்க விரும்பினால் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். கடந்த 2002ம் ஆண்டு முதல், மஞ்சக்குப்பத்தில் இயங்கும் மகாலட்சுமி ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்லுாரியில் 15,000 ரூபாய் வரை கட்டண சலுகையுடன் சேர்க்கை நடக்கிறது.3 ஆண்டு பி.எஸ்.சி., ஓட்டல் மேனேஜ்மென்ட் அண்டு கேட்ரிங் அட்மினிஸ்டேரஷன் மற்றும் டிப்ளமோ இன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்ரிங் அட்மினிஸ்டேரஷன் பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது. குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்குவதால் முன்னணி கேட்ரிங் கல்லுாரியாக திகழ்கிறது.கடலுார் மாவட்டத்தில் 35 ஆண்டுகளாக முன்ணணி ஐ.டி.ஐ.,யாக மகாலட்சுமி ஐ.டி.ஐ., உள்ளது. வரும் 31ம் தேதி வரை தமிழக அரசின் ஒதுக்கீட்டின்படி முதல் 150 மாணவர்களுக்கான சேர்க்கை நடக்கிறது. இங்கு, 10வது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இலவசமாக ஐ.டி.ஐ., சேரலாம்.மேலும், அரசின் அங்கீகாரம் பெற்ற என்.சி.வி.டி.பயிற்சிகளான ஆட்டோமொபைல் மெக்கானிக், எலக்ட்ரிக்கல் டெக்னிஷீயன், ஏசி மெக்கானிக், வெல்டிங் டெக்னிஷீயன் போன்றவற்றிலும் சேர்க்கை பெற்று உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.