உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., மா.செ., பிரசாரம்

தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து அ.தி.மு.க., மா.செ., பிரசாரம்

வடலுார்: கடலுார் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் ஆபத்தாரணபுரத்தில் துவங்கி, வடலுார் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், சிவக்கொழுந்து பண்ருட்டி தொகுதியில் எம்.எல்.ஏ., சிறப்பாக மக்கள் பணியாற்றினர். இவரை எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை வரவேற்கிறோம். ஆனால் பெருவெளியில் அமைக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.வள்ளலார் பிறந்த ஊரான மருதுார், தண்ணீரால் விளக்கேற்றிய நற்கருங்குழி, சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கலாம்.கோரிக்கைகள் நிறைவேற சிவக்கொழுந்துவிற்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், மாவட்ட பேரவைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷியம், வினோத்.வடலுார் நகர செயலாளர் பாபு, அவைத் தலைவர் வேல்முருகன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன், மாநில துணைச் செயலாளர் பக்தரட்சகன், தகவல் தொழில்நுட்ப அணி திருமலைவாசன்.பொருளாளர் நடராஜன், நகர நிர்வாகிகள் பாலு, ராஜி, பரமசிவம், ராமமூர்த்தி, மணி, பக்தவச்சலம், சுரேஷ், தெய்வகுமார், தே.மு.தி.க., நகர செயலாளர் ஜாகிர், நிர்வாகிகள் பாலமுருகன், வேல்முருகன், சரவணன், பாண்டுரங்கன், லோகு, சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை