உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி கடலுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி கடலுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) சொரத்துார் ராஜேந்திரன், (மேற்கு) அருண்மொழிதேவன் (கிழக்கு) பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்ரமணியன், சத்யா பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., மன்ற முருகுமணி, மீனவரணி செயலாளர் தங்கமணி, ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க சூரியமூர்த்தி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், ஜெ., பேரவை துணை செயலாளர் பக்தரட்சகன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு சேர்மன்கள் ஜானகிராமன், பக்கிரி, ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், அண்ணா தொழிற்சங்க பாலகிருஷ்ணன், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், கந்தன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க., அரசை கண்டிப்பது. கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் இறந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ