சேத்தியாத்தோப்பு: அ.தி.மு.க, என்றும், விவசாயிகளுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என, அருண்மொழித்தேன் எம்.எல்.ஏ., பேசினார்.சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம், புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு வரவேற்றார். அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வேட்பாளர் சந்திரகாசனை அறிமுகம் செய்து வைத்தார்.சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் உமாநாத், மாவட்ட நிர்வாகி பாலு, அ.தி.மு.க., மாவட்ட இணைசெயலாளர் செஞ்சிலட்சுமி, மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வளர்மதி, ஒன்றிய செயலாளர்கள் புவனகிரி சிவப்பிரகாசம், சீனிவாசன், கீரப்பாளையம் விநாயகமூர்த்தி,கருப்பன், கம்மாபுரம் முனுசாமி, சின்னரகுராமன் ஸ்ரீமுஷ்ணம் நவநீதக்கிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் மணிகண்டன், செல்வக்குமார், மனோகர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி, அருண்மொழிதேவன் பேசியதாவது:புவனகிரி தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காமல் விவசாயிகளுக்கு தொல்லையாக என்.எல்.சி., நிர்வாகம் இருந்து வருகிறது. அந்நிறுவன நில எடுப்பால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள் எதிர்காலத்தில் தங்களது நிலங்களை பாதுகாக்க. அ.தி.மு.க, வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும்.என்.எல்.சி., எதிராக, நாங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று கூறிய பா.ம.க., தற்போது, பா.ஜ.,வில் இணைந்துள்ளது. எனவே, என்றும் விவசாயிகளுக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே.இவ்வாறு அவர் பேசினார்.