உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது

மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது

கடலுார், : குடிப்பதை தட்டிக்கேட்ட மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த உச்சிமேடு தியாகு நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் 43; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.நேற்று முன்தினம் முத்துக்குமரன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் தகராறு செய்தார். இதனை அவரது மகன் முகேஷ், 17; கண்டித்தார்.இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமரன், தனது மகன் முகேைஷ ஆபாசமாக திட்டி, அருகில் கிடந்த கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த முகேஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து முத்துக்குமரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ