உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ள பாதிப்பு அபாயம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

வெள்ள பாதிப்பு அபாயம் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

கடலுார: காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ள அபாயத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய நெய் வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட வட்டாரங்களில் கொள்ளிடம் ஆற்று உபரி நீர் திறக்கப்பட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குனர்கள் பிரேம்சாந்தி, செல்வம் ஆகியோர் பயிர்கள் நீரில் மூழ்கினால் வெள்ளி நீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேளாண் அலுவலர்களுக்குஆலோசனை வழங்கினர்.தொடர்ந்து,வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய நெல் வயல்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். குமராட்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்வேல், வேளாண்மை அலுவலர் சிந்துஜா, துணை அலுவலர் ராயப்பநாதன், உதவி அலுவலர் மாலினி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை