உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: பண்ருட்டி பி.டி.ஒ.,அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியை துவங்க வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் ராஜேந்திரன், துணை நிர்வாகிகள் வெங்கடேசன், கொளஞ்சிஅம்மாள் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்டத் தலைவர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன்,மா.கம்யூ வட்ட செயலர் எழுமலை, விவசாய சங்க துணைத் தலைவர் லோகநாதன் சிறப்புரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி