உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏ.ஐ.டி.யூ.சி., தொழிலாளர் சங்க பயிற்சி முகாம்

ஏ.ஐ.டி.யூ.சி., தொழிலாளர் சங்க பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம், கடலுார் மாவட்டக்குழு கிளை நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பில் நடந்த முகாமிற்கு வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார். ஸ்ரீமுஷ்ணம் தலைவர் செல்வராசு, செயலாளர் சேகர், கவுரவ தலைவர் மகாலிங்கம், ஏகாம்பரம், சிமோன்ராஜ், கனகேஸ்வரி, மணிகண்டன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மாநில செயலாளர் துரைசாமி பயிற்சி அளித்தனர்.மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகர், மாவட்ட துணைதக தலைவர் விஸ்வநாதன், கலியபெருமாள், அண்ணாமலை, ராமச்சந்திரன், சந்திரலேகா, மாவட்ட நிர்வாகக்குழு சிவப்பிரகாசம் பேசினர்.கூட்டத்தில், கட்டட தொழிலாளர்கள் தொழில்புரியும் இடங்களில் விபத்து, பேரிடர் காலங்களில் இழப்பு ஏற்படும்போது பாதுகாப்பிற்கான காப்பீடு செய்தல் அவசியம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சேத்தியாத்தோப்பு நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், அருள், வரதராஜன, சக்திவேல், மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை