உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்கள் பகுப்பாய்வு

நடமாடும் வாகனம் மூலம் உணவு பொருட்கள் பகுப்பாய்வு

கடலுார்: புவனகிரியில், நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் உணவு பொருட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.சென்னை உணவு பாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் இருந்து நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம், கடலுார் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக உடனடி ஆய்வு செய்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.நேற்று புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வரும் இனிப்பு வகைகள், கார வகைகள், சீரகம், பச்சை பட்டாணி, வெல்லம், பால், சோம்பு போன்ற உணவுப் பொருள்களில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்பட்டது.மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில், புவனகிரி அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கலப்படம் கண்டறிவது பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி, உணவு பகுப்பாய்வாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை