| ADDED : ஆக 10, 2024 05:43 AM
கடலுார்: கடலுார் அடுத்த புதுக்கடையில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கி சிறப்புரையாற்றினார். பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன், பொறியாளர் கல்யாணி முன்னிலை வகித்தனர்.அப்போது, சமூக நலத்துறை அலுவலர் கோமதி, ஊராட்சி தலைவர்கள் கனகராஜ், தமிழரசி பிரகாஷ், முத்துக்குமாரசாமி, அழகு மனோகர், பாலசுப்ரமணியம், குமார், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், வேலன் ஸ்டில்ஸ் வேலு, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.