உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை அப்டேட் ஆகவில்லை அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

அண்ணாமலை அப்டேட் ஆகவில்லை அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

கடலுார்: ''தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை 'அப்டேட்' ஆகாமல் இருக்கிறார்'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.மணல் குவாரி கலவர வழக்கில், கடலுார் கோர்ட்டில் ஆஜராக வந்த அவர் கூறியதாவது:போக்குவரத்து துறை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. சென்னையில் இயக்கப்படும் தாழ்தள பஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், பிற மாநகரங்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வரும் 2026 தேர்தலுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் ஜெய்ஸ்ரீராம் என சொல்வார் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 'ஜெய் ஸ்ரீராம்' என கூறி வந்த பிரதமர் மோடியே, தற்போது 'ஜெய் ஜெகநாத்' என கூறி, கட்சி மாறிவிட்டார். அண்ணாமலை இன்னும் 'அப்டேட்' ஆகாமல் உள்ளார். அவர் அப்டேட் ஆகட்டும். பிறகு பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை