உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருத்தாசலம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர், முதன்மை சார்பு நீதிபதி கவுதமன் செய்திக்குறிப்பு; விருத்தாசலம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப் பணிகள் குழுவில், சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆசிரியர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், எம்.எஸ்.டபிள்யூ பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள், சட்டக் கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் வரை)மற்றும் அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சமூகசேவை புரியும் சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சமூகத் தொண்டு புரியும் மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம். சேவை சார்ந்த இப்பணிக்கு ஊதியம் கிடையாது.விண்ணப்பங்களை கடலுார் மாவட்ட நீதிமன்றத்தின் https://districts ecourts.gov.in/Cuddalore என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விருத்தாசலம் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலம், வரும் 20ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.வரும் 24ம் தேதி, காலை 10:30 மணியளவில் நேர்முகத் தேர்வு நடக்கும். அன்று, விருத்தாசலம் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் வட்ட சட்டப் பணிகள் குழு அலுவலகத்தில் அசல் ஆவணங்களுடன் காலை 9:30 மணி அளவில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை