உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை பெற கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தேர்வு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தேர்வு வரும் 10ம் தேதி மாணவர்களுக்கும், 11ம் தேதி மாணவிகளுக்கும் காலை 7:00 மணிக்கு நடக்கிறது. இதற்கான விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட அளவில் தேர்ச்சி பெறுவோர், மாநிலத் தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விளையாட்டு விடுதியில் சேர வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்தால் மட்டுமே மாவட்ட அளவிலான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கடலுார் மாவட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி