உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி

சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி

பண்ருட்டி: பண்ருட்டி மளிகை வியாபாரிகள் சங்கம்,தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை இணைந்து சமையல் கலைஞர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமை நடத்தினர்.வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், குளோபல் பயிற்சி நிலைய அருண் ஆகியோர் பாதுகாப்பாக, சுத்தமாக சமையல் செய்வது குறித்து பயிற்சி வழங்கினர்.பயிற்சியில் திருமண மண்டபங்களில் சமைக்கின்ற கலைஞர்கள் தரமாக சமைப்பதற்கும், சுகாதார முறைகளை பயன்படுத்துவதற்கும், உணவுப் பொருள்களின் காலாவதி தேதி அறிந்து சமைப்பதற்கும், உணவில் நச்சுத்தன்மை ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 62 சமையல் கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை