உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவாக அருண்மொழிதேவன் ஓட்டு சேகரிப்பு

தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவாக அருண்மொழிதேவன் ஓட்டு சேகரிப்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சியில் தே.மு.தி.க., வேட்பாளருக்கு ஆதரவாக அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்தார்.கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிகிறார். அவருக்கு ஆதரவாக விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஓட்டு சேகரிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது.அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில் 29வது வார்டு முல்லா தோட்டம் பகுதியில் வீடு வீடாகச் சென்று, பெண்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, கொட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, நல்லாட்சி தொடர கொட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டு போடுமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்கள், தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், மண்டல பொறுப்பாளர் மணிவண்ணன், தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், மாநில செயற்குழு ரமேஷ், நகர தலைவர் சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ