உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள்

வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள் இன்று துவங்குகிறது.நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராமணி, மகேஸ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவ்மாரி, சாமுண்டீஸ்வரி ஆகிய சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர்.வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது.அம்மன்களுக்கு நவராத்திரி கொண்டாடுவது போல் வராஹிக்கு ஆஷாட நவராத்திரி நடப்பது சிறப்பாகும். வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது.தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரதனையும் மாலையில் 1008 சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையும் நடக்கிறது.வரும் 13 ஆம் தேதி விளக்கு பூஜையும்,15 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும்,16 ஆம் தேதி வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலிக்கிறார்.விழா ஏற்பாடுகளை ராமு பூசாரி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி