உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் திடீர் ஆய்வு

ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் திடீர் ஆய்வு

திட்டக்குடி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட ராமநத்தம் போலீஸ் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது, சாராயம் முற்றிலுமாக இப்பகுதியில் ஒழிக்கப்பட வேண்டும், அருகில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளதால், மலையிலிருந்து யாராவது கடத்திவந்து விற்க முயற்சிக்கலாம். அதுபோல தவறுகள் நடக்காதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.கடலுார்- புதுச்சேரி இடையிலான சோதனை சாவடியில் ஏ.டி.ஜி.பி., கடந்த மாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மாவட்டத்தின் கடைக்கோடியான ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏ.டி.ஜி.பி.,யின் திடீர் விசிட் ராமநத்தம் போலீசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை