சிதம்பரம்: சிதம்பரத்தில் சி.என்.ஜி.,கேஸ் கிடைக்காததால், தொழில் பாதிக்கப்படுவதாக, ஆட்டோ டிரைவர்கள், சப் கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்தனர்.சிதம்பரம் அனைத்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில், 300 க்கும் மேற்பட்டோர் சப் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், சிதம்பரத்தில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோகளில் அரசு அனுமதியுடன்சி.என்.ஜி., கேஸ் பொருத்தப்பட்டு இயங்கப்படுகிறது. நகரி்ல இரு இடங்களில் சி.என்.ஜி. கேஸ் பங்க் உள்ளது. ஆனால் இரு பங்குகளிலும் சி.என்.ஜி., கேஸ் இல்லை என, கூறுகின்றனர். பயோ கேஸ் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.சி.என்.ஜி. பங்க் சிதம்பரத்தில் இருந்ததால்தான், புதிய ஆட்டோக்களை வாங்கினோம்.எனவே, சப் கலெக்டர், நடவடிக்கை மேற்கொண்டு, சிதம்பரத்தில் சி.என்.ஜி., கேஸ் அனுமதி பெற்று நடத்தப்படும் 2 பங்குகளிலும், தடையின்றி சி.என்.ஜி., கேஸ் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.அப்போது ஆட்டோ ஓட்டுனர் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், மோகன்தாஸ், விஜய், ராஜ்குமார், தியாகராஜன், மோகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.