உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

விருதை தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். தி.மு.க., பிரமுகர். இவர் விருத்தாசலம் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் மேல் தளத்தில் மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை 6:00 மணியளவில் அவரது வீட்டை சோதனை செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் காரில் வந்தனர். அப்போது, அவரது வீடு பூட்டியிருந்தது. அதனால், மேல் தளத்தில் இருந்த மெடிக்கல் ஏஜென்சியில், வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரம் சோதனை செய்தனர். மேலும், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரிலும் சோதனை செய்தனர்.சோதனையில் ஆவணங்கள் மற்றும் பணம் ஏதும் சிக்காத நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ