உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கடலுார் : சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பள்ளியில் பயிற்சி பெற்று கராத்தே தேர்வில் கருப்பு பட்டையம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கடலுார், தேவனாம்பட்டிணம் எக்விடாஸ் பள்ளியில் நடந்த விழாவில், சுன்சுகான் இஷின்ரியூ கராத்தே பள்ளி தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சசிகலா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கவுரவ விருந்தினர்களாக அகர்வால் சுவீட்ஸ் எழிலரசன், லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, கிரீன்டெக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அய்யப்பன் பங்கேற்றனர். அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் உதயகுமார் வாழ்த்திப் பேசினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் காயத்திரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை