உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாக்கடை கழிவுகள் அகற்றாமல் துர்நாற்றம்

சாக்கடை கழிவுகள் அகற்றாமல் துர்நாற்றம்

புவனகிரி: புவனகிரியில் சாக்கடை கழிவுகள் அகற்றாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.புவனகிரி பஸ் நிலையம் அருகே ஒருவழிப்பாதையில், வடிகால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தது. அதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, துப்புரவு பணியாளர்கள் வடிகாலில் கழிவுகளை அகற்றி சாலையோரம் கொட்டினர். அவைகள் அங்கிருந்துத அகற்றாமல் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சாக்கடை கழிவுகளை விரைந்து அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை