உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முறைகேடு குறித்து பேனர்; முதல்வர் திட்ட முகாமில் பரபரப்பு

முறைகேடு குறித்து பேனர்; முதல்வர் திட்ட முகாமில் பரபரப்பு

புவனகிரி : புவனகிரி அருகே முதல்வர் திட்ட முகாமில், ஊராட்சியின் முறைகேடு குறித்து வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.புவனகிரி அருகே, கீரப்பாளையம் ஒன்றியம் டி.நெடுஞ்சேரி பள்ளி வளாகத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று மனுக்கள் பெற்றனர். இந்த முகாம் நடந்த பள்ளி அருகில் முன்னாள் பா.ம.க., கவுன்சிலர் தமிழ்ச்செல்வி, ஊராட்சியில் நடந்த முறைகேடுகளை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் பேனர் வைத்திருந்தார்.தகவலறிந்த புத்துார் போலீசார் விசாரணை நடத்தி பேனரை அகற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி