உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரதான சாலை சிக்னலில் விபத்தைத் தடுக்க பேரிகார்டு

பிரதான சாலை சிக்னலில் விபத்தைத் தடுக்க பேரிகார்டு

கடலுார் : கடலுாரில் பிரதான சாலையில் வாகன விபத்தைத் தடுக்க டிராபிக் போலீ சார் பேரிகார்டு மூலம் டிவைடர் அமைத்துள்ளனர்.கடலுார் ஜவான்ஸ் பவன் சிக்னல் வழியாக புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை, சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வருகிறது.இந்த சிக்னல் பகுதியில் புதுச்சேரி, விழுப்புரம், சென்னை மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் சாலையில் வாகனங்கள் செல்வ தற்கு பிரிவு சாலை உள்ளது.இச்சாலை பகுதியில் எவ்வித தடுப்பும் ஏற்படுத்தப்படாததால், வாகனங்கள் தாறுமாறாக செல்வது, எதிர் திசையில் செல்வது என விதிமுறை மீறல் அதிகரித்து வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்து வருகிறது.இதைத் தடுக்கும் வகையில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பேரிகார்டு மூலம் டிவைடர் அமைத்துள்ளனர். இதனால், சிக்னல் பகுதியில் விபத்து குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி