| ADDED : மே 13, 2024 05:23 AM
விருத்தாசலம்: கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி பவானி வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். மாணவி பூமிகா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி சாதனா 478 இரண்டாமிடம், மாணவி அணுஸ்ரீ 425 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பிடித்தார்.அவர்களை கல்விக்குழும தாளாளர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி நாராயணன் ஆகியோர் பாராட்டினர். வெற்றிக்கு துணையாக இருந்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாக அலுவலர் பொன்சடையமுத்து, பள்ளி முதல்வர் ஜெஸ்வந்தி உடனிருந்தனர்.அப்போது, தாளாளர் நாராயணன், செயலாளர் மகாலட்சுமி 2024 - 25ம் கல்வியாண்டில், 425 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவியருக்கு 100 சதவீத கட்டண சலுகை, 400 மதிப்பெண்ணுக்கு மேல் 75 சதவீத கட்டண சலுகை, 375 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 52 சதவீத கட்ட சலுகை வழங்கப்படுகிறது என்றனர்.