| ADDED : ஏப் 27, 2024 04:29 AM
பெண்ணாடம்: சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார் சாலைப் பணியை விரைந்து துவக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இப்பகுதி மக்களும் தங்களின் அன்றாட தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்த சாலையில் அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் பகுதியில் சாலை பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைவது தொடர்ந்தது.அதைத்தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் தார்சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது. ஆனால் சாலை பணிகள் துவங்காமல் இதுநாள் வரை கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைவது தொடர்கிறது.எனவே, சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார் சலை பணியை விரைந்து துவக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.