உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் கடத்தியவர் கைது

மது பாட்டில் கடத்தியவர் கைது

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக்கில் மது பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்குமாரமங்கலம், கஸ்டம்ஸ் சாலையில் பண்ருட்டி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை நிறுத்தினர். ஆனால் பைக்கை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றதால் போலீசார் 4 கி.மீ., துாரம் துரத்திச் சென்று கண்டரக்கோட்டையில் மடக்கிப் பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம், அண்டராயநல்லுாரைச் சேர்ந்த ஏழுமலை மகன் எழிலரசன், 25; என்பதும் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. உடன் அவர் மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து ஏழிலரசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ