மேலும் செய்திகள்
மின் விளக்குகள் பழுது பாலாற்று பாலத்தில் பீதி
06-Feb-2025
பண்ருட்டி:கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் ஏற்பட்ட மண் அரிப்பால், பாலத்தின் துாண்கள் பலமிழந்து அதிர்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையில், கோலியனுார் - பண்ருட்டி இடையே கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில், 2001ல் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த சாலை 2005ல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், 800 மீட்டர் துாரம் உள்ள கண்டரக்கோட்டை பெண்ணையாற்று பாலம், 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், பாலத்தின் பிடிப்பான ராட்சத துாண்கள் பலமிழந்து வருகின்றன.மேலும், இந்த ஆற்றில் பல ஆண்டுகளாக அரசு மணல் குவாரி நடத்தியதில், 20 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டது. இதனால், ஆற்றின் மட்டம் 20 அடிக்கு கீழே சென்றது.இந்நிலையில், இரு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றின் மையப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் சென்றதால், அப்பகுதியில் உள்ள பாலத்தின் துாண்கள் பலம் இழந்துள்ளன.இதனால், வாகனங்கள் செல்லும்போது பாலம் அதிர்வதால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதம் நடப்பதற்கு முன் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள், பாலத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
06-Feb-2025