உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார், : அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வுதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊதிய மாற்றத்திலிருந்து இணைக்காமல் பென்ஷன் மாற்றம் வழங்க வேண்டும், 01.01.2017 முதல் 3வது ஊதிய பேச்சுவார்த்தை அடிப்படையில் பென்ஷன் மாற்றம் வழங்க கோரி, கடலுார் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு, கூட்டமைப்பு மாவட்ட தலைவர் மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.செயலர் மதியழகன், மாநில துணைத் தலைவர் மாணிக்கமூர்த்தி, மாநில சிறப்பு அழைப்பாளர் முத்துகுமரசாமி மற்றும் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க சம்பந்தம், சவுந்தரராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ