மேலும் செய்திகள்
பாரம்பரிய நெல் ரகம் பயிரிட வேளாண் துறை அறிவுரை
11-Aug-2024
குள்ளஞ்சாவடி: சம்பா பருவத்திற்கு ஏற்ற சான்று பெற்ற விதைகளை மானியத்தில் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுகுறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 5 ஆயிரம் ஹெக்டர் பரப்பில், சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பருவத்திற்கு தேவையான மத்திய கால மற்றும், நீண்ட கால சான்று பெற்ற நெல் ரகங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதாக, குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள் குறிஞ்சிப்பாடி மற்றும், குள்ளஞ்சாவடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் 70 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. மேலும், பாரம்பரிய ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, சீரக சம்பா மற்றும், சீவன் சம்பா விதைகள், 600 கிலோ இருப்பில் உள்ளது. விவசாயிகள் தேவையான சம்பா நெல் விதைகள், நுண்ணூட்டக் கலவை, உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்களை மானிய விலையில் பெற்று கொள்ளலாம்.
11-Aug-2024