கடலுார் : கடலுார், பெரியகங்கணாங்குப்பம் ஆர்.கே.,ஐ.டி.ஐ. அருகில் சந்திரன் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. கடை உரிமையாளர் சந்திரகாசு, நீலா சந்திரகாசு, தலைமை தாங்கினர். சசிகுமார், நிர்மலா தேவி சசிகுமார், கீர்த்திகா, மகதி, தமன்சந்திரன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அர்ச்சகர் சங்க மாநில தலைவரும், மூத்த வக்கீலுமான அருணாசலம் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.போஸ் ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் தாமரைக்கண்ணன், வக்கீல் தமிழரசன், சுப்ரமணியன், சந்திரசேகரன், டாக்டர்கள் வினோத், முகுந்தன், தொழிலதிபர் பிரதீபன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பன்னீர்செல்வம், ராமகிருஷ்ணன், செல்லையா, ஜெயக்குமார், சண்முகம், ராஜமச்சேந்திரசோழன், பக்தவச்சலம், அருள், கண்ணன், புருஷோத்தமன், குணசேகரன், வாணிவரதன், பன்னீர் உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து உரிமையாளர் சந்திரகாசு கூறுகையில், 'திறப்பு விழா சலுகையாக ஜூன் 30 வரை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் வீல் சேர் இலவசம். 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் ஈசி சேர் இலவசம், சோபா, டைனிங் செட் வாங்கினால் டீப்பாய் இலவசம். பீரோ, கட்டில் வாங்கினால் பெட் இலவசம். சுலப தவணை முறையில் பொருட்கள் வாங்க ஆலோசனை வழங்கப்படும்' என்றார்.