உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம் சேர்மன் செந்தில்குமார் பிரசாரம்

வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம் சேர்மன் செந்தில்குமார் பிரசாரம்

சிதம்பரம், : சிதம்பரம் வி.சி., கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம் நகராட்சி சேர்மன், தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார்,பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.சிதம்பரம் கனகசபை நகர் நிர்மலா பள்ளி அருகில் உள்ள, புனித இருதய தேவாலயம், வண்டிகேட் அருகில் உள்ள டி.இ.எல்.சி., தேவாலயம் ஆகியவற்றில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்துவர்களிடம் சேர்மன் செந்தில்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர், பேசுகையில், 'சிறுபான்மையின மக்களுக்காக என்றென்றும் உறுதுணையோடு இருந்து வருகிறோம். சர்ச் எதிரில் உங்களுக்கு பாலம் எனது சொந்த செலவில் அமைத்து தருகிறேன். அப்படி இல்லையென்றால், அமைச்சரிடம் கோரிக்கை வைத்து அதனை கண்டிப்பாக செய்து கொடுப்பேன். உங்களுக்காக இத்தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.நகர துணை செயலார் பாலசுப்ரமணியன், இளங்கோ, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் கலையரசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் தொகுதி ஐ.டி., விங்., அமைப்பாளர் ஸ்ரீதர், வார்டு செயலாளர் முருகேசன், இளைஞர் அணி அமைப்பாளர் மக்கள் அருள், நிர்வாகிகள் சரவணன், அறிவழகன், மாணவரணி பரணி, கூட்டணி கட்சியான, காங்., நகர தலைவர் மக்கின், ராஜா சம்பத், மூ.மு.க., செல்வராஜ், இந்திய கம்யூ., தமிமுன் அன்சாரி, வி.சி., பால அறவாழி, ரத்தினம், பாலு, த.வா.க., நகர தலைவர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி