உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது .குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்குதாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் சப் கலெக்டர்ராஷ்மிராணி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். குமராட்சி ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் வரவேற்றார். முகாமில், குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,குமராட்சி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி,வெண்ணையூர், வெள்ளூர், முள்ளங்குடி, நந்திமங்கலம், அதங்குடிஉள்பட8 ஊராட்சிகளில் இருந்து, பொதுமக்களிடம் பல்வேறு துறைகள் மூலம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.மனுக்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.குமராட்சி பி.டி.ஓ., சரவணன், துணை பி.டி.ஓ., தாமரைச்செல்வன், சிதம்பரம் மின் துறை பொறியாளர் சந்திரபானு, குமராட்சி இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தீயணைப்பு அலுவலர் முரளி,ஊராட்சி தலைவர்கள், ஜெயா திருமாவளவன் மல்லிகா, இளையராஜா, பிரபு, விஜயகுமார், லட்சமி, சம்பத்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை